• Welcome

    News update and ads.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • தொழில் நுட்பம்

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

முதலாளி இன்றி உள்ளே வரலாமா?

தற்பொழுது, இணைய தளங்களில், ஒரு செய்தி பரவிக்
கொண்டுள்ளது. மலேசியாவிலிருந்து இந்தியா செல்லும்
அந்நிய தொழிலாளர்கள், திரும்ப மலேசியாவில் புக,
அவர்களது முதலாளி, விமான நிலையத்தில் அவர்களை
வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று. இதைப் பற்றிய
எந்த அறிவிப்பும் இதுவரை குடி நுழைவுத்துறை வெளியிடவில்லை.
 குடிநுழைவு துறையை தொடர்பு கொண்டு முதலாளிகள் தகவல் தெரிந்துக்
கொள்ளலாம்.
Share:
”கஜா புயலில் பாதித்த மக்களை  ஏன் சார் பாக்கல ? "என்ற கேள்விக்கு

"கட்சி ஆரம்பித்த பின் பார்த்துக் கொள்ளலாம்” அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளரின் கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் வைரலாகும் வீடியோ

Share:

மஸ்திட் இந்தியாவில் இரத்த தானம்

வருகிற 29 டிசம்பர் 2018 , சனிக்கிழமை, கோலாலும்பூர்
மஸ்ஜித் இந்தியாவில் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் கீழ்த்தளத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரத்த தானத்தை மலேசிய
அழகன்குளம் ஜமாத் ஏற்பாடு செய்துள்ளது. இது
காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெறும்.

Share:

விரைவு பேருந்து கட்டணம் உயர்வு

மலேசிய போக்குவரத்து அமைச்சு, விரைவு பேருந்து
கட்டணத்தை ஏற்றவிருப்பாதாக அறிவித்ததை தொடர்ந்து
மக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
10 முதல் 30 சதவீதம் கட்டணம் ஏறும் என அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அடுத்த வருடம சீனப் பெரு நாள் விடுமுறை வருவதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உத்தேசித்திருப்பார்கள்.

அமைச்சின் முடிவிற்காக பேருந்து நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
Share:

வியாபாரம் தவணைக்கு

ஷா ஆலாம் u15 பகுதியில் உள்ள இந்திய முஸ்லிம் உணவகம், தவணைக்கு உள்ளது.
ஒரு நாளைக்கு 1000 ரிங்கிட் வரை வியாபாரம் நடக்கக்கூடிய இந்த கடையில் வேலை ஆட்கள் உள்ளனர்.
கடை வாடகை 3000 ரிங்கிட்.

வேலை ஆட்கள் கடைக்கு மேலே தங்கிக் கொள்ளலாம். தொடர்பு

0186666673
Share:

பிரமிப்பூட்டும் நெடுஞ்சாலை


கராகோரம் நெடுஞ்சாலை, சீனாவிலிருந்து பாக்கிஸ்தானுக்கு 1300 கிமீ தொலைவில் உள்ளது.
நம்பமுடியாத மற்றும் அற்புதமான பொறியியல் மற்றும் கட்டுமான சாதனையை!
பயணம் முழுவதும் அழகான இயற்கைக்காட்சி!
Share:

மலாயாவிற்கு கப்பல் பயணம்.

மலாயாவில் இந்தியர்கள் நிறைய பேர் வந்து தொழில்
துறைகளில் ஈடுபட்டிருந்தார்கள். விமானப் போக்குவரத்து
இல்லாத காலங்களில், ரஜீலா, சிதம்பரம், ஸ்டேட் ஓப் மெட்ராஸ்
போன்ற கப்பல்களில்
மக்கள் மலாயாவிற்கு வந்தனர். வயதானவர்கள்
இன்றும் அந்த பழைய நினைவுகளை நினைவு கூறுவர்.
கோலாலும்பூரில் உபைதுல்லா ட்ராவல்ஸ் என்ற
முகவர் மூலமாக மக்கள் பயணச் சீட்டை வாங்கி வந்தனர்.
பினாங்கிலிருந்து கப்பல் புறப்படும் நாட்களைப் பற்றி ஆங்கிலத்தில்
விளக்கும் கட்டுரை இதோ.
https://andamansaravanan.wordpress.com/2012/07/02/nostalgic-account-on-big-indian-ocean-liners-called-at-penang/




Share:

மலேசியாவில் கிறூஸ்துமஸ் விடுமுறை


மலேசியாவில் கிறூஸ்துமஸ் விடுமுறை

மலேசிய தலை நகரான கோலாலும்பூரில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நீண்ட விடுமுறை வந்தால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதும், தலை நகர் கூட்டம் இன்றி காணப்படுவதும் வழக்கமான் ஒன்றுதான். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருந்து சில நாட்கள் விடுபட இந்த விடுமுறை ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

வருகிற 25 டிசம்பர் கிறுஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மலேசியாவில் விடுமுறை அனுசரிக்கப்படுகிறது.  இந்த விடுமுறை செவ்வாய்க்கிழமை அன்று வருவதால், பலரும் திங்கள் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டு, வெள்ளிக்கிழமையே, தங்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் அல்லது விடுமுறக்கு சென்று இருப்பார்கள். இன்று சனிக்கிழமை தலை நகரில்
பல சாலைகளில் வாகனம் குறைவாகவே தென்பட்டன.
இந்த விடுமுறைக் காலங்களில், கோலாலும்பூருக்கு வருபவர்களும்
உண்டு.

21 டிசம்பர் 2018 வெள்ளிக் கிழமை அன்று ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான்

இந்த விடுமுறையில் நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
சன்வேயில் குளிக்க ஆசையா ? 420 மீட்டர்  உயரத்தில் இருந்து தலை நகரைக் கண்டு களிக்க வேண்டுமா ?  அல்லது உண்டு களிக்க வேண்டுமா ? அந்தரத்தில் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமா ?
சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளன.


தொடர்புக்கு
Zeenath Travel & Tours 
Sdn Bhd
+6012-670 7579
Share:

உணவகங்களில் புகை பிடிக்க தடை

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், உணவகங்களில் புகை
பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மலேசிய சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. இந்த சட்டத்தை அமலாக்க , 5000
அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் எனவும். சுகாதார அமைச்சு அறிவுத்துள்ளது.
உணவக உரிமையாளர்கள், புகை பிடிக்க தடை விதிக்க கோறும் அறிவிப்பு
பலகையை தங்கள் கடைகளில் மாட்டி வைக்க வேண்டியது கட்டாயமக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றாத முதலாளிகளுக்கு எச்சரிக்கை கடிதம் தரப்படும்.
அதே வேளையில், சிகெரட் சாம்பல் தட்டும் வைக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்த விதியில் சற்று விலக்கு அளிக்குமாறு சில உணவக உரிமையாளர்கள் சங்கங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டன. அதாவது, உணவகங்களில், புகை பிடிப்பவர்களூக்கென்று ஓர் இடத்தை ஒதுக்க அவை கோரிக்கையை முன் வைத்தன. ஆனால், அரசாங்கம் இதற்கு இணங்கவில்லை.

ஜனவரி முதல், பொதுமக்கள் உணவகங்களுக்கு வெளியே சுமார் 3 மீட்டர் தூரத்தில் புகை பிடிக்கலாம் என சுகாதார துணை அமைச்சர்
டாக்டர் லீ பூன் சாய் கூறினார்.
Image result for smoking


Share:

உணவை மூடி வைக்கவும்

உங்கள் உணவு மற்றும் பானங்களை மூடி வைக்கவில்லை என்றால்,
அழையா விருந்தாளி வந்து விடுவார். இந்தக் காணொளியைப்
பாருங்கள். எவ்வளவு உயரமான கோப்பையில் ஒய்யாரமாக குடிக்கிறது
என்று.

Share:

இந்தியாவிலிருந்து புதிய விமான சேவை

 இந்தியாவின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, 15 டிசம்பர் 2018 முதல் பெங்களூரு ( BLR ) மற்றும் புது டெல்லியிலுருந்து  ( DEL ) கோலாலும்பூருக்கு விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது. பெங்களுரிலுந்து மாலை 6:10 க்கும், புது டெல்லியிலிருந்து காலை 6:50 க்கும் விமானங்கள் புறப்படுகின்றன.
இதற்கு ஏர்பஸ் 320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Image result for indigo

இது சம்பந்தமாக மலேசிய விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட காணொளியைக் காணலாம்.





Share:

தோசை சுடும் மலாய்க்காரர்

தோசை சாப்பிட ஆசையா?
இந்த காணொளியில் , ஒரு மலாய்க்காரர் முட்டை தோசை சுடுவதைப் பார்க்கலாம்
தோசை மலாய்க்காரர்களிடையே பிரபல்யமாகி வரும் ஒரு உணவாகும்.
அவர்களும் இதை விரும்பி சாப்பிடுகறார்கள்.
இந்த கடை
மலாக்காவில் உள்ளதாக அவர் கூறுகிறார்.

Share:

மலேசியாவில் இந்திய திரைப்பட படப் பிடிப்பு

பல தமிழ் நாட்டு தமிழ் படங்கள் மலேசியாவில் படமாக்கப் பட்டுள்ளன. ஒரு பாடல் காட்சி மட்டும் மலேசியாவில் படமாக்கப்பட்டு வந்த காலம் போய், தற்போது ஒரு முழு படத்தையே மலேசியாவில் படமாக்குகிறார்கள். கோடம்பாக்கத்திற்கும் மலேசியாவிற்கும் அப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம்.

மொட்ட சிவா கெட்ட சிவா திரைப் படத்தில் இடம் பெற்ற ஆடலுடன் கூடிய பாடலை என்ற பாடல் காட்சி மலேசியாவில் டமாக்கப்பட்டது.

சில திரைப்படங்களில் ஆஸ்திரேலியா, துபாய் அல்லது மும்பாயில் நடப்பதாக கதை வரும்.
ஆனால், படக் காட்சிகள் மலேசியாவில் எடுக்கபட்டிருக்கும்.

ஜக்குபாய், பாண்டி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், அசல் , சிங்கம் 2 போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

சிங்கம் 2 படத்தில் வில்லன் அறிமுகமாகும் காட்சி, மலேசியாவில் படமாக்கப்பட்டது.

எம் ஜி ஆர்  நடித்த உலகம் சுற்றும் வாலிபன், சுபாங் அனைத்துலக விமான நிலையத்தில் படமாக்கப்பட்டது.
Image result for jackie chan malaysia

Share:

சோகோ மலிவு விற்பனை

சோகோ. மலேசிய தலை நகரில் உள்ள பலரும் அறிந்திருக்ககூடிய ஒரு புகழ் பெற்ற பேரங்கடாடி. ஏராளமான கடைகள், தாராளமாக சுற்றிப் பார்க்கலாம்.

இங்கு பல உயர்தர ஆடை அணிகள் அழகாக வைக்கப்பட்டிருக்கும்.

பண்டிகைக் காலங்களில், அதிரடி விலை குறைப்பு செய்யப்படும்.

70 % வரை சில பொருட்களுக்கு கழிவு வழங்கப்படும். அந்த நேரத்தில் வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதும்.



சோகோ உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு விற்பனை மூலம் பிரத்தியேக விலை வழங்கப்படும். இந்த விறபனைக்கு முன்னரே உறுப்பினர்களுக்கு இது பற்றீய தகவல் கடிதம் மூலம் அனுப்பப்படும். இந்த விற்பனை நடக்கும் இடத்திற்கு, உறுப்பினர்கள் மட்டுமே செல்ல முடியும்.


இங்கே குழந்தைகளுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு, சிறுவர்களுக்கு என்றும், மின்னியல் பொருட்கள் என்றும் இன்னும் பல பிரிவாக பொருட்கள்
வைக்கப்பட்டிருக்கும்.

முஸ்லிம்கள் தொழ இடமும் உள்ளதால், தொழுகையை நிறைவேற்றலாம்
பலவுத
Share:

Contact Form

Name

Email *

Message *

மலேசிய நேரம்

advertise here

Coming soon

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.