Pages

Thursday, December 20, 2018

உணவகங்களில் புகை பிடிக்க தடை

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், உணவகங்களில் புகை
பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மலேசிய சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. இந்த சட்டத்தை அமலாக்க , 5000
அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் எனவும். சுகாதார அமைச்சு அறிவுத்துள்ளது.
உணவக உரிமையாளர்கள், புகை பிடிக்க தடை விதிக்க கோறும் அறிவிப்பு
பலகையை தங்கள் கடைகளில் மாட்டி வைக்க வேண்டியது கட்டாயமக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றாத முதலாளிகளுக்கு எச்சரிக்கை கடிதம் தரப்படும்.
அதே வேளையில், சிகெரட் சாம்பல் தட்டும் வைக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்த விதியில் சற்று விலக்கு அளிக்குமாறு சில உணவக உரிமையாளர்கள் சங்கங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டன. அதாவது, உணவகங்களில், புகை பிடிப்பவர்களூக்கென்று ஓர் இடத்தை ஒதுக்க அவை கோரிக்கையை முன் வைத்தன. ஆனால், அரசாங்கம் இதற்கு இணங்கவில்லை.

ஜனவரி முதல், பொதுமக்கள் உணவகங்களுக்கு வெளியே சுமார் 3 மீட்டர் தூரத்தில் புகை பிடிக்கலாம் என சுகாதார துணை அமைச்சர்
டாக்டர் லீ பூன் சாய் கூறினார்.
Image result for smoking


No comments:

Post a Comment